வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Webdunia

2013-14 தமிழக நிதிநிலை அறிக்கை - மு‌க்‌கிய அ‌ம்ச‌ங்க‌ள்!

FILE
2013-14 ஆம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்து‌‌ள்ளா‌ர். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு...

2013-14 ஆம் நிதியாண்டிற்கு ரூ.22,938 கோடியாக நிதி பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை, மேலும் வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

2013-14 ஆம் நிதியாண்டிற்கான வரி வருவாய் இலக்கு ரூ.86,065 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வணிக வரி வருவாய் இலக்கு ரூ.56,025 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயத் தீர்வை மூலமாக ரூ.14,469 கோடியும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன வரி மூலமாக ரூ.4,881 கோடி இலக்கு நிர்ணயம்.

முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம் மூலமாக ரூ.9,874 கோடி.

----------------------

2013-14 நிதியாண்டு மத்திய பட்ஜெட்டுடன் வெளியான நிதி மசோதாவில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான பிரிவுகள் உள்ளன.

இந்த நிதி நிலை மசோதாவின் புதிய பிரிவுகளால் மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்திற்கு எதிரான இந்தப் பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.


இலங்கைத் தமிழ் அகதிகள் நலனிற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு.

இலங்கைத் தமிழ் அதிகளும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அனுமதி.

ஓய்வூதியதாரர்களின் மருத்துவச் செலவினை ஈடுசெய்ய தனி காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.

மத்திய வருவாயில் இருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ.500 கோடி குறைந்துள்ளது.

ஆதி திராவிடர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.122.48 கோடி நிதி ஒதுக்கீடு.

ஆதி திராவிடர் துணைத் திட்டத்திற்கு ரூ.7.042 கோடி ஒதுக்கீடு.

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு.

திருமண உதவித் திட்டத்திற்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.6,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கான சிறப்பு நிதி உதவிக்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு.

இலவச மிக்ஸி வழங்க ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு.

சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,492.86 கோடி நிதி ஒதுக்கீடு.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,320.5 கோடி நிதி ஒதுக்கீடு.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான ரூ.263 கோடி நிதி ஒதுக்கீடு.

---------------------

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு ரூ.323 கோடி ஒதுக்கீடு.

பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்குவதற்கு ரூ.8.48 கோடி ஒதுக்கீடு.

மலைவாழ் மாணவர்களுக்கு கம்பளி ஆடை வழங்குவதற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு.

மாணவிகளுக்கு சானிடரி ந·ப்கின்ஸ் வழங்குவதற்கு ரூ.54.63 கோடி நிதி ஒதுக்கீடு.

இந்த நிதியாண்டில் 60,000 பசுமை வீடுகள் அமைக்கப்படும்.

உழவர் பெருவிழா தொடர்ந்து நடைபெற ரூ.46 கோடி ஒதுக்கீடு.

---------------------

நீர்தேக்கம் அமைக்க ரூ.330 கோடி ஒதுக்கீடு.

பிற குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.550 கோடி ஒதுக்கீடு.

அணை புனரமைப்பு பணிகளுக்கு ரூ.390 கோடி ஒதுக்கீடு.

65 லட்சம் மரக் கன்றுகளை நடும் பணி இந்த நிதியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

பொருளாதார நிலையில் நலிந்தவர்களுக்கு 50,000 வீடுகள் வழங்கத் திட்டம்.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் புதிதாக ஏற்படுத்தப்படும்.

போக்குவரத்துக் கழகத்தின் கூடுதல் எரிபொருள் செலவை ஈடுசெய்ய ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

மாமல்லபுரத்தில் ரூ.250 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த கடல் வாழ் உயிரினக் காட்சியகம் ஏற்படுத்தப்படும்.

-----------------

8 புதிய கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த நிதியாண்டில் செயல்படத் தொடங்கும்.

விளையாட்டுத் துறைக்கு ரூ.112.50 கோடி ஒதுக்கீடு.

5.62 லட்சம் மடிக்கணினி வழங்க ரூ.1.500 கோடி நிதி ஒதுக்கீடு.

புத்தகப் பைகள் வழங்க ரூ.19.79 கோடி ஒதுக்கீடு.

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.4,887 கோடி நிதி ஒதுக்கீடு.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3.539 கோடி நிதி ஒதுக்கீடு.

திடக்கழிவு மேலாண்மை முறை அனைத்து கிராமங்களிலும் அமல்படுத்தப்படும்.

கழிவுகளை சேகரித்து கையாளும் முறைக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு.

--------------------

கல்வித் துறைக்கு இந்த நிதியாண்டில் ரு.16,965 கோடி ஒதுக்கீடு.

10வது, 11வது மற்றும் 12வது பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு.

அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு.

தேசிய இடை நிலைக் கல்வித் திட்டத்திற்கு ரூ.366.57 கோடி ஒதுக்கீடு.

கல்வித் துறை தொடர்பான நபார்டு திட்டங்களுக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு.

அனைத்துப் பள்ளிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கு மற்றும் கழிவறை வசதி ஏற்பாடு செய்யப்படும்.

சுமார் 97 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217 கோடி ஒதுக்கீடு.

மருத்துவ மேலாண்மை தகவல் முறைத் திட்டத்தை அமல்படுத்த ரூ.117.93 கோடி ஒதுக்கீடு.

மதுரை, நெல்லை மருத்துவமனைகளில் புற்று நோய் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

--------------------

எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 660 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்க திட்டப் பணிகள் தொடங்கப்படும்.

உடன்குடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட 2 மின் உற்பத்தி பிரிவு இந்த ஆண்டில் தொடங்கப்படும்.

2வது பசுமைப் புரட்சிக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.

சுற்றுலா வளர்ச்சித் துறைக்கு ரூ.153.95 கோடி ஒதுக்கீடு.

ஊரகப் பகுதிகளை சாலைகளை இணைக்க ரூ.78 கோடி செலவில் 45 சிறிய பாலங்கள் அமைக்கப்படும்.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.39 கோடி ஒதுக்கீடு.

முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு இ‌ந்த ஆ‌ண்டு ரூ.270 கோடி ஒதுக்கீடு.

108 இலவச ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு இ‌ந்த ஆ‌ண்டு ரூ.77.59 கோடி ஒதுக்கீடு.

-----------------

வட சென்னை மின் உற்பத்தி திட்டத்தில் 600 மெகாவாட் அலகு வரும் மே மாதம் முதல் உற்பத்தியைத் தொடங்கும்.

வல்லூர் மின் உற்பத்தி திட்டத்தில் 3வது 500 மெகாவாட் அலகு அக்டோபர் மாதம் முதல் உற்பத்தியைத் தொடங்கும்.

தூத்துக்குடியில் தொடங்கப்படும் மின் உற்பத்தி திட்டத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகள் முறையே டிசம்பர் 2013 மற்றும் 2014 மார்ச் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கும்.

----------------------

நெடுஞ்சாலைத் துறைக்கு 6.452 கோடி ஒதுக்கீடு.

சாலை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,032 கோடி ஒதுக்கீடு.

இலவச வேட்டி, சேலைகள் வழங்க ரூ.363 கோடி ஒதுக்கீடு. 1.72 கோடி வேட்டிகள், 1.73 கோடி சேலைகள் வழங்கவும் திட்டம்.

கைத்தறி தள்ளுபடி மானியத்திற்கு ரூ.78 கோடி ஒதுக்கீடு.

1000 கீ.மீட்டர் சாலை ஒரு வழித் தடத்திலிருந்து இரு வழித் தடமாக மாற்றப்படும்.

-------------------

இராமநாதபுரம், திருவள்ளூரில் மீன் பிடி பதப்படுத்தப்படும் நிலையம் அமைக்கப்படும்.

நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 10 விழுக்காடு ஆகும்.

தூத்துக்குடி, மதுரையில் தொழில் வழித்தடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். 10 ஆண்டுகளில் 1.9 லட்சம் கோடி நிதி பெறத் திட்டம்.

தூத்துக்குடியில் பொதுதுறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.

தொழில் நிறுவனங்களுக்கு நிலம் வழங்க சிப்காட் மூலம் 25,000 ஏக்கர் நில வங்கி ஏற்படுத்தப்படும்.

-------------------

12,000 கரவை மாடுகள், 1.5 லட்சம் பெண்களுக்கு 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.

100 கால்நடை துணை நிலையங்கள் மருத்துவமனைகளாக மேம்படுத்தப்படும்.

நீர்ப்பாசனத் திட்டத்திற்கு ரூ.3,314 கோடி ஒதுக்கீடு.

காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்க மண்டல பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்படும்.

தோட்டக்கலைத் துறைக்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு.

மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கான வேலை நாட்கள் அதிகரிப்பு.

15 பண்ணை குட்டைகள் அமைக்க திட்டம்.

இந்த நிதியாண்டில் அனைத்து காவல் நிலையங்களும் சொந்த கட்டடத்தில் இயங்க ஏற்பாடு செய்யப்படும்.

பாரம்பரிய நீர் நிலைகளை சீரமைக்க ரூ.50 கோடி.

தீவனப் பெருக்கத் திட்டத்திற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு.

-----------------------

புதிய 7 அரிசி ஆலைகள் அமைக்க ரூ.32 கோடி ஒதுக்கீடு.

கால்நடை மருத்துவமனைகளை சீரமைக்க 25 கோடி ஒதுக்கீடு.

50 விழுக்காடு பயிர் இழந்த விவசாயிகளுக்கு ரூ.15,000 இழப்பீடு.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதார் அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

விலைவாசி உயர்விற்கு மத்திய அரசின் டீசல், பெட்ரோல் விலை உயர்வே காரணம்.

இளைஞர்கள் சுய வேலை வாய்ப்பிற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு.

அவசர கால அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

--------------------

கால்நடை வளர்ப்பில் கோழி வளர்ப்பிற்காக மட்டும் ரூ.25 கோடி ஒதுக்கீடு.

மாநில பயிர் சாகுபடி பரப்பு 2.8 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்படும்.

மீனவர்களுக்கு மீன் பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிதி இந்த ஆண்டில் 200 கோடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆழ்கடல் மீன் பிடி படகு வாங்குவதற்கான மானியம் 25 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக அதிகரிப்பு. இதற்காக 30 கோடி ஒதுக்கீடு.

மீன் வளத்துறைக்கு ரூ.467 கோடி ஒதுக்கீடு.

கடலூரில் நவீன மீன் இறங்கு தளம் அமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு.

உணவு மானியத்திற்கு ரூ.4,900 கோடி ஒதுக்கீடு.

--------------

இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்திற்கு இந்த ஆண்டு 250 கோடி ஒதுக்கீடு.

இந்த நிதியாண்டிற்கான உணவுத் திருவிழாவிற்கு 46 கோடி ஒதுக்கீடு.

வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.

-------------------

தொழில் முனைவோர் திறன் வளர்ச்சிக்கு 5 கோடி ஒதுக்கீடு.

நில வரி ரத்து செய்யப்படுகிறது.

வேளாண் திட்டத்திற்கு 5,189 கோடி ஒதுக்கீடு.

குடிநீர் திட்டங்களுக்கு 37 கோடி ஒதுக்கீடு.

கால்நடை வளர்ப்பு, பராமரிப்பிற்கு 15 கோடி ஒதுக்கீடு.

வெளிநாடு முதலீடுகள் மூலம் 15 லட்சம் கோடி நிதி பெறுவது இந்த ஆண்டின் இலக்கான நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தரமான விதை உற்பத்தி செய்து விநியோகம் செய்ய 161 கோடி ஒதுக்கீடு.

------------------

நீதிமன்ற கட்டமைப்பிற்கு 162 கோடி ஒதுக்கீடு.

திட்ட வடிவமைப்பிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

இந்த ஆண்டின் திட்ட மதிப்பீடு 37,000 கோடி ஒதுக்கீடு.

கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்துக்கு கூடுதல் நிதி.

நீதித்துறைக்கு 695 கோடி ஒதுக்கீடு.

காவல் துறை மீட்பு பணிக்காக 208 கோடி ஒதுக்கீடு.

சிறைத் துறைக்கு 109 கோடி ஒதுக்கீடு.

--------------------

இளைஞர் திறன் மேம்பாடு 75 கோடியிலிருந்து 100 கோடியாக உயர்த்தப்படுகிறது.

நகர்புற வீட்டு வசதித் திட்டங்களுக்கு கூடுதல் முதலீடு.

காவல் துறைக்கு 4,706 கோடி ஒதுக்கீடு.

இந்த நிதியாண்டில் 2 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்படும்.

வேளாண் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 700 கோடி ஒதுக்கீடு.

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் புது வாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த 350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தற்போது 60 வட்டாரங்களில் நடைமுறையில் உள்ள இத்திட்டம் 110 வட்டாரங்களுக்கு விரிவு படுத்தப்படும்.