செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2015 (11:38 IST)

துப்பாக்கி தோட்டாக்களுடன் நடிகர் கார்த்திக் சகோதரர் கைது

நடிகர் கார்த்திக் சகோதரர் கணேஷ்(57). இவர் கொடைக்கானலில் ஹோட்டல் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்த கைப்பை ஒன்றில் கைத்துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் கணேசிடம் விசாரணை நடத்தினர்.


 

அப்போது அவர் கூறுகையில்,  கைப்பற்றப்பட்ட கைப்பை நடிகர் கார்த்திக்கு சொந்தமானது. அவர் கடந்த முறை கொடைக்கானல் வந்தபோது ஓட்டலில் இதனை மறந்து வைத்து விட்டு சென்று விட்டார். அதன்பின் சென்னை வரும்போது அதனை எடுத்துவருமாறு கார்த்திக் என்னிடம் கூறினார். பையில் தோட்டாக்கள் இருப்பது எனக்கு தெரியாது என்று கூறினார்.

இதையடுத்து நடிகர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு போலீஸார் விசாரித்தனர். அப்போது கைப்பை தன்னுடையதுதான் என்றும், துப்பாக்கி வைத்து இருக்க லைசென்சு வைத்துள்ளேன் என்றும் கூறினார்.

பின்னர் பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கி தோட்டாக்களை விமான நிலையத்திற்கு கொண்டு வந்ததாக வழக்குப்பதிவு செய்து கணேசை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.