வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (21:10 IST)

கணவருக்கு விவாகரத்து நோட்டிஸ் அனுப்பிய இந்திராணி முகர்ஜி

ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி தனது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் பீட்டர் முகர்ஜி. அவரது மனைவி இந்திராணி முகர்ஜி பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
 
இந்திராணிக்கும் அவரது முதல் கணவர் சித்தார்த் தாஸூக்கும் ஷீனா போரா என்ற மகளும், மைக்கேல் போரா என்ற மகனும் பிறந்தனர். அதேபோல பீட்டர் முகர்ஜிக்கும், அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர் ராகுல் முகர்ஜி.
 
ஆந்நிலையில், ஷீனா போரா ராகுலை முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இந்திராணி முகர்ஜி, இவரது மூன்றாவது கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கண்ணா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், இந்திராணி முகர்ஜி தனது கணவர் பீட்டர் முகர்ஜியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில்  தங்களுடனான திருமணவாழ்க்கையை முறித்துக்கொண்டு விவகாரத்து செய்ய உள்ளதால் வரும் 30-ம் தேதிக்குள் தனக்கான பண நிவாரணத்தை தந்து பதில் அளிக்கவும் என குறிப்பிட்டுள்ளார்.