வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Webdunia

விருதுக்கு காசு வாங்கறாங்க - போட்டுத் தாக்கிய இயக்குனர்

FILE
விருதுன்னாலே வில்லங்கமும் கூட வரும் போல. நல்லபடியாக நடந்து வந்த நார்வே திரைப்பட விருதுகளிலும் குற்றச்சாற்று.

வருடம்தோறும் நார்வேயில் தமிழ் திரைப்பட விழா நடக்கும். தமிழ்ப் படங்கள் மட்டுமே திரையிடப்படும் இந்த விழாவில் விருதுகளும் வழங்கப்படும். இந்த வருட திரைப்பட விழாவில் பீட்சா, ஒரு கல் ஒரு கண்ணாடி, சுந்தரபாண்டியன், ராட்டினம், வழக்கு எண், நீர்ப்பறவை உள்பட பல படங்கள் கலந்து கொள்கின்றன. விழா 24 ஆம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் தொடங்கி 28 ஆம் தேதிவரை நடக்கிறது.

இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்த போது ராட்டினம் படத்தின் இயக்குனர்; தங்கசாமியிடம் உங்க படம்தான் சிறந்த படம் என தெரிவித்து மேடையிலும் அறிவித்தார்களாம். பிறகு விழாக்குழுவின் சென்னைப் ப‌ரிவினர் அவரை தொடர்பு கொண்டு, உங்கள் படத்துக்குதான் விருது, விமானச் செலவுக்கும் பிற செலவுக்கும் நீங்கள் காசு தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். காசு கொடுத்து விருது வாங்க வேண்டுமா என்று காசு தர மறுத்திருக்கிறார் தங்கசாமி.

இந்த விஷயத்தை தற்போது புகாராக இயக்குனர்கள் சங்கத்தில் தந்திருக்கிறார்.

இப்போது எழுகிற கேள்வி, இதற்குமுன் விருது வாங்கியவர்கள் எல்லாம் காசு தந்துதான் விருது பெற்றார்களா

தங்கசாமி ஒருபுறம் பிரச்சனையை கிளப்ப பிரபுசாலமன், மணிவண்ணன்;, ராட்டினம் ஹீரோ லகுபரன் உள்பட பலர் இன்று நார்வேக்கு பிளைட் ஏறுகிறார்கள்.

தங்கசாமி த்ரியை பற்ற வைத்திருக்கிறார். எரிமலை எப்போது வெடிக்குமோ.