வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 12 ஜூன் 2014 (14:43 IST)

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்: மனோஜ் திவாரியும், ராபின் உத்தப்பாவும் கேப்டன்கள்

இந்திய ஏ அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு ஏ அணியுடன் நான்கு நாள்கள் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது.
 
இதற்கான இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணிக்கு மனோஜ் திவாரியும், ஒருநாள் அணிக்கு ராபின் உத்தப்பாவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தவிர ஏழாவது ஐபிஎல் போட்டியில் அசத்திய ராகுல், கருண் நாயர், உன்முக்த் சந்த், ஆஷ்கர் படேல், மனன் வோரா, ரிஷி தவன் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். ஜூலை 6 - 9 வரை முதல் டெஸ்ட் போட்டியும், ஜூலை 13 - 16 வரை இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறும். ஒருநாள் ஆட்டங்களில் ஆஸ்திரேலிய ஏ அணி, தென் ஆப்பிரிக்க ஏ அணி, மற்றுமொரு ஆஸ்திரேலிய உள்ளூர் அணியும் பங்கேற்கவுள்ளன.