பவானிசாகர் அருகே புலி தாக்கியதால் ஆறு வயது மதிக்கதக்க யானை குட்டி ஒன்று இறந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இதற்குட்பட்ட கொத்தமங்கலம் வனத்தில் பவானிசாகர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பள்ளத்தில் ஆறு வயது மதிக்கதக்க ஒரு யானை குட்டி இறந்து கிடந்தது.
அருகில் புலியின் பாதச்சுவடு இருந்தது இதனால் புலிதாக்கி இந்த யானை குட்டி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
இதேபோல் ஈரோடு வனப்பகுதியில் தாய்யானை மேலே விழுந்ததில் ஆறு மாதம் வயது கொண்ட அதன் குட்டி இறந்தது. இந்த இருவித சம்பவம் குறித்து ஈரோடு மண்டல வனபாதுகாவலர் அருண் விசாரித்து வருகிறார்.