வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 20 பிப்ரவரி 2016 (19:29 IST)

பிரீடம் 251 ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் வருமான வரி துறையினர் திடீர் சோதனை

பிரீடம் 251 என்ற ஸ்மார்ட்போனை என்ற குறைந்த விலையில் தருவதாக அறிவித்த, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தில் மத்திய உற்பத்திவரி துறை மற்றும் வருமான வரி துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர்.


 


நொய்டா நகரைச் சேர்ந்த ரிங்கிங் பெல்ஸ் என்ற செல்போன் நிறுவனம் நேற்று முன்தினம் மத்திய அரசுடன் இணைந்து பிரீடம் 251 என்ற ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலைக்கு (ரூ.251) விற்பனை செய்வதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனால், இரண்டு நாட்களாக அந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்காக ஏராளமானோர்  ஒரே நேரத்தில் அந்த செல்போனை வாங்குவதற்கு  குவிந்ததால், அந்த இணையதளமே முடங்கியது. 
 
 
இதையடுத்து, கடந்த  இரண்டு நாட்களில் அந்த நிறுவனத்தின் இணையதளம் மூலம் 6 கோடிக்கும் அதிகமானோர் இந்த செல்போனை வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர். எதிர்பார்த்தைவிட அதிகளவு  முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக முதற்கட்ட முன்பதிவு முடிவுக்கு வந்துள்ளதாகவும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
 
இந்நிலையில்,  மத்திய உற்பத்திவரி துறை மற்றும் வருமானவரி அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பிரீடம் 251 ஸ்மார்ட்போனை இந்திய தரநிர்ணயச் சான்று இல்லாமல் சந்தைப்படுத்தி இருப்பது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ரிங்கிங்பெல்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் அளிக்கும்படி கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும்,  ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்து உத்தரபிரதேச மாநில அரசு ஆய்வு நடத்தும்படியும் சிபிஐ அதிகாரிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள். மேலும் அந்நிறுவன உரிமையாளர்களிடம் இருந்து பாஸ்போர்ட்களை ஒப்படைக்குமாறு சிபிஐ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது