வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (13:04 IST)

500, 1000 நோட்டுகளை வைத்து சொத்து வாங்கிய சசிகலா! – வருமானவரித்துறை அறிக்கை!

சிறைதண்டனை அனுபவித்து வரும் சசிகலா வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்த அறிக்கையை வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா. இந்நிலையில் அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா பல்வேறு சொத்துகள் வாங்கியுள்ளது தெளிவாகியுள்ளது. இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம், சர்க்கரை ஆலை, காகித ஆலை மற்றும் ஒரு ரிசார்ட் என பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா வாங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.