வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

ஆரோக்கியம் தரும் கொள்ளு ரசம் செய்ய...!

தேவையானவை: 
 
கொள்ளு - அரை கப்
தனியா, சீரகம் - தலா 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - அரை டீஸ்பூன்
நறுக்கிய சாம்பார் வெங்காயம் - கால் கப்
புளிக்கரைசல் - கால் கப்
நெய், கறிவேப்பிலை
கடுகு, சீரகம் - தாளிக்க தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: 
 
கொள்ளைக் கழுவி, 4 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 6 முதல் 7 விசில் வைத்து நன்றாக வேகவைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு தனியா, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, சாம்பார் வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும் ஆறியதும் மிக்ஸியில்  கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 
வேகவைத்த கொள்ளு கால் கப் சேர்த்து நைஸாக அரைக்கவும். இதனுடன் வேகவைத்த கொள்ளு ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்கவும்.

பிறகு புளிக்கரைசல் விட்டு, தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து நுரை வந்ததும் இறக்கி கொத்தமல்லி சேர்க்கவும். நெய்யில்  கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.