வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 ஜனவரி 2020 (17:15 IST)

நாளை முதல் பால் விலை உயர்வு! – மக்கள் அதிர்ச்சி!

தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை ஆவின் நிறுவனம் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது தனியார் பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிலையங்கள் லிட்டருக்கு ரூ.4 வரை விலையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தனியார் பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினாலும் தங்களுக்கு அதில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை என மாட்டு உரிமையாளர்கள் மற்றும் சில்லரை பால் விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பால் விலை உயர்வோடு தனியார் பால் பொருட்களான தயிர், வெண்ணெய், பாலாடை கட்டி, பன்னீர் போன்ற பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

நாளை முதல் பால் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.