வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நாள்பட்ட மலச்சிக்கலையும் குணமாக்க உதவும் அத்திப்பழம்...!!

அத்திமரம் மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலை , பிஞ்சு ,காய் , பழம் , பால், பட்டை போன்ற அனைத்து பாகங்களும் ஆரோக்கிய பலன்களை அள்ளி வழங்கும் தன்மை கொண்டன. இந்த பழங்கள் மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. 
அத்திப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. அதனால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நார்ச்சத்தும் அதிகமுள்ளதால்  உடல்பருமனை குறைக்கிறது.
 
அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும்.
 
பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். மேலும் இவை வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர  உதவுகிறது.
 
அத்தி பழங்களில் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க் என பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 
 
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை  இரவில் சாப்பிட வேண்டும்.
 
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டால் மூலநோயைக் குணப்படுத்தலாம். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
 
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் வினிகரில் ஒருவாரம் வரை  ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.