வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (11:01 IST)

3 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டறியப்பட்ட கப்பல்!!

2014 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16–ந் தேதி தென்கொரியாவில் மாணவ, மாணவிகள் உல்லாசப்பயணம் மேற்கொண்ட கப்பல், ஜிண்டோ தீவில் மூழ்கி விபத்துக்குள்ளானது.


 
 
இதில் சுமார் 300 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 6 ஆயிரத்து 825 டன் எடை உடைய அந்த கப்பல், கடலுக்கு அடியில் மூழ்கி போய் விட்டது.
 
ஆனால் இந்த கப்பலை தூக்கி நிறுத்தி மீட்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு வலுத்தது. இதையடுத்து அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது.
 
அதன் விளைவாக அந்த கப்பல் இப்போது கடலுக்கு அடியில் இருந்து தூக்கி நிறுத்தப்பட்டு விட்டது. இதில் நூற்றுக்கணக்கான சீன தொழிலாளர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
 
இந்த கப்பல் இன்னும் 2 வாரங்களில் துறைமுகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.