வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2017 (13:48 IST)

இளவரசி டயானா மரணம்: 20 ஆண்டுகால மர்மத்தை உடைத்த உளவுப்பிரிவு ஏஜென்ட்!!

சாதாரண குடும்பத்தில் பிறந்த டயானா பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.


 
 
டயானா சார்லஸ் தம்பதிக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் டயானா உயிரிழந்தார். 
 
இது விபத்து அல்ல திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என டயானா மரணம் 20 ஆண்டு காலமாக விளங்காத மர்மாகவே இருந்து வந்தது. தற்போது இந்த மர்மத்திற்கான பதிலை மாஜி உளவுப்பிரிவு ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் கூறியுள்ளார்.
 
நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர் உளவுப்பிரிவு ஏஜென்டாக பணியாற்றிய போது, பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், அரசுக்கு எதிராக செயல்படும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
டயானா கொலை செய்யப்பட்டதற்கான காரணமும், அவரை யார் கொலை செய்ய சொன்னார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இளவரசி டயானா சார்லஸ் உடன் வாழ்ந்து கொண்டிருந்த போதே வேறொருவரைக் காதலிப்பதாக கூறி சார்லஸை விவாகரத்து செய்யவும் முடிவு செய்தார். இது அரச குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியது. 
 
மேலும் டயானா அரசு குடும்ப ரகசியங்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருந்ததால் அவரைக் கொல்ல வேண்டும் என்று பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இருந்து நேரடி உத்தரவு வந்தது. இந்த உத்தரவை  இளவரசர் பிலிப் பிறப்பித்தார். 
 
ஆனால், இது கொலை என யாருக்கும் தெரிய கூடாது என்பதையும், இது ஒரு விபத்தாகதான் இருக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். எனவே, இதை ஒரு விபத்து போல் சித்தரித்து திட்டமிட்டு டயானை கொல்லப்படார் என தெரிவித்துள்ளார்.
 
டயானாவைக் கொன்றதைக் கண்டுபிடிப்பது முடியாத காரியம், இதற்கு ஒரு சில ஆதாரங்கள் மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், கடைசி நேரத்திலாவது உண்மையை சொன்னால் தான் என்னுடைய உயிர் போகும் என்பதால் டயானா கொலை மர்மங்களை உடைப்பதாகவும் ஜான் ஹோப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.