வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 21 செப்டம்பர் 2017 (11:53 IST)

உடலுக்கே வெளியே துடிக்கும் இதயம் ; அவதிப்படும் சிறுமி - வைரல் வீடியோ

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுமி சிரித்தால் அவரின் இதயம் வெளியே வந்து துடிக்கிறது. அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள இச்சிறுமியின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


 

 
அமெரிககவில் புளோரிடா நகரில் வசித்து வரும் சிறுமி விர்ஷயா பரூன். 8 வயது சிறுமியான இவரின் பெற்றோர் ரஷ்யாவிலிருந்து குடி புளோரிடாவில் குடி பெயர்ந்துள்ளதனர். இந்த சிறுமி அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது, இந்த சிறுமியின் இதயம் வெளியே வந்து துடிக்கிறது. உலகில் 5.5 லட்சம் பேர்களில் ஒருவருக்கு இந்த நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 
 
இந்த குழந்தை பிறந்தவுடன் இறந்துவிடுவாள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவள் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
 
அறுவை சிகிச்சை மூலம் அவளது இதயத்தை சரி செய்ய முடியாது என மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். ஏனெல், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால், ஒரு நாள் கண்டிப்பாக என் மகள் சிகிச்சையின் மூலம் குணமடைவாள் என விர்ஷயாவின் பெற்றோர்கள் கூறிவருகின்றனர்.

மேலும், சிறுமியின் வீடியோவை பார்த்த பலரும், அவள் விரைவில் குணமடைய தாங்கள் பிரார்த்தனை செய்வதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.