வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 30 மார்ச் 2017 (10:59 IST)

முட்டைக்குள் வைரக்கல்: இங்கிலாந்தில் அதிசயம்!!

இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது. 


 
 
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன் காலை உணவாக அவித்த முட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அவர் பல்லில் ஏதோ சிக்கியது. 
 
அது என்னவென்று பார்த்தபோது குபிக் சிர்கோனியா என்ற ஒரு வகை வைரக்கல் இருந்தது. இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
தற்போது, பல தரப்பினரும் முட்டைக்குள் வைரக்கல் எப்படி சிக்கியிருக்கலாம் என்பதற்கான விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.
 
ஆனால், வைரம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார் சேலி தாம்சன்.