வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (15:09 IST)

ஆசிரியையை ஒரே நாளில் 5 முறை கற்பழித்த பிச்சைக்காரன்!

ஆசிரியையை ஒரே நாளில் 5 முறை கற்பழித்த பிச்சைக்காரன்!

ஜிம்பாப்வே நாட்டில் பிச்சைக்காரன் ஒருவன் ஆசிரியை ஒருவரை மரத்தில் கட்டி வைத்து பலவந்தமாக பலமுறை கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
ஜிம்பாப்வே நாட்டின் வாங்கே நகரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் போன்ஃபேஸ் நியாம்பியா என்ற 32 வயதான நபர் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர் பிச்சை எடுத்த பணத்தை சேர்த்து வைத்து விலைமாது பெண்களுடன் சென்று உல்லாசமாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளான்.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விலைமாது பெண் ஒருவரை உல்லாசமாக இருக்க வரவழைத்துள்ளான். ஆனால் அந்த விலைமாது இவர் பிச்சைக்காரர் என்பதை பார்த்ததும் தனக்கு விருப்பம் இல்லை என கூறி அங்கிருந்து புறப்பட முயன்றுள்ளார்.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த பிச்சைக்காரன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் அவரை தாக்கி கட்டாயப்படுத்தி கற்பழித்து பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை விரட்டியுள்ளான்.
 
இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்கு பின்னர் அந்த பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் வேலை பார்க்கும் ஆசிரியை ஒருவர் பேருந்துக்காக அங்கு வந்துள்ளார். அப்போது நேரம் இரவு சுமார் 10 மணி இருக்கும்.
 
அந்த ஆசிரியையை கண்டதும் அவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என விரும்பிய அந்த பிச்சைக்காரன் ஆசிரியையிடம் நைசாக பேச்சுக்கொடுக்க ஆரம்பித்துள்ளான். இந்நிலையில் ஆசிரியை எதிர்பாராத நேரம் பார்த்து இரும்பு கம்பியை கொண்டு ஆசிரியையை தாக்கி அருகில் உள்ள புதருக்குள் இழுத்து சென்றுள்ளான்.
 
அங்கு கொண்டு சென்று ஆசிரியையை நிர்வாணமாக்கி அவரை மரத்தில் கட்டி வைத்தும், வாயில் துணியை திணித்தும் ஆசிரியையை அந்த பிச்சைக்காரன் பலவந்தமாக கற்பழித்துள்ளான். ஆசிரியை கற்பழித்துவிட்டு புகைப்பிடித்துவிட்டு வந்து மீண்டும் கற்பழித்துள்ளான். இப்படி ஐந்து முறை ஆசிரியையை அந்த இரவில் கற்பழித்துள்ளான் பிச்சைக்காரன்.
 
இரவு 10 மணிக்கு ஆசிரியையை கட்டிப்போட்ட பிச்சைக்காரன் அதிகாலை 3 மணிக்கு தான் விடுதலை செய்துள்ளான். இதற்கிடையில் ஏற்கனவே பிச்சைக்காரனால் பாதிக்கப்பட்ட விலைமாது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து மறுநாள் பேருந்து நிலையத்தில் பிச்சைக்காரனை கைது செய்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த ஆசிரியையும் பின்னர் பிச்சைக்காரன் மீது புகார் அளித்தார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.