வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

ஸ்டஃப்டு கோவைக்காய் செய்ய...!

தேவையானவை: 
 
கோவைக்காய் - 100 கிராம்
கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
 
வறுத்துப் பொடி செய்ய:
 
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் 
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன் 
எள் - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கொள்ளு - 2 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம், உப்பு  - தேவையான அளவு

 
செய்முறை:

கோவைக்காயை கழுவி துடைத்து நான்காக வெட்டி கொள்ள வேண்டும். (முழுவதும் வெட்டிவிட வேண்டாம்).  பின்பு, ஆவியில் சில நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 
 
பின்னர் மேலே குறிப்பிட்ட பொருட்களை வறுத்து ஆற வைத்துப் பொடித்து கொள்ளவேண்டும். வெந்த கோவைக்காயின் நடுவே இந்த பொடியை அடைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு தாளித்து, ஸ்டஃப் செய்யப்பட கோவைக்காயை சேர்த்து  தண்ணீர் தெளித்து வேக விட்டு, உப்பு தூவிக் கிளறி, சுருள வதக்கி இறக்கவும். சுவையான ஸ்டஃப்டு கோவைக்காய் தயார்.