Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

புடலங்காய் குழம்பு செய்ய...

Widgets Magazine

தேவையான பொருள்கள்:
 
புடலங்காய்   - 200 கிராம் 
துவரம் பருப்பு - 1/2 கப் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
 
வறுத்து அரைக்க...
 
எண்ணெய் - 2 ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் - 3 
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன் 
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன் 
அரிசி - 1 டீஸ்பூன் 
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு

 
செய்முறை:
 
துவரம் பருப்பில் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து மசித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய், அரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து  வறுக்கவும். வறுத்ததை  தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். 
 
இன்னொரு பாத்திரத்தில் புடலங்காய், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும். கடாயில் வேக வைத்த பருப்பு,  காய் கலவை, அரைத்த கலவை சேர்த்து கொதிக்க விடவும். 
 
கொதித்ததும் கடுகு, உ.பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து குழம்புடன் சேர்க்கவும். புடலங்காய் குழம்பு தயார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா....

உருளைக்கிழங்கை வேகவைத்து உறித்து துண்டங்களாகச் செய்து கொள்ளவும். அரைக்கக் கொடுத்தவைகளை ...

news

மணத்தக்காளித் துவையல் செய்ய.....

கீரையை நன்றாகச் சுத்தம்செய்து, மஞ்சள்தூள் சேர்த்து வெறும் வாணலியில் போட்டு வதக்கவும். ...

news

ஈஸியான ரவா பொங்கல் செய்ய...

கடாயில் நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி ரவை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். மற்றொரு கடாயில் ...

news

இனிப்பு பொங்கல் எப்படி செய்வது? இதோ....

பொங்கல் உணவு சர்க்கரைப்பொங்கல், வெண் பொங்கல் என இரு வகைப்படும். வெண் பொங்கல் காலை ...

Widgets Magazine Widgets Magazine