வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Murugan
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (19:32 IST)

வாஸ்து சாஸ்திரம் அறிவியல் சார்ந்த விஷயமா?

உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "அறிவியலில் எல்லா வினாக்களுக்கும் விடையில்லை" என்று கூறியதன் அடிப்படையில். உலகில் உள்ள கண்டுபிடிப்புகள் அனைத்தையும் இரண்டு முறைகளில் வகைப்படுத்தலாம். 


 
 
1. தர்க்கரீதியான முடிவு (Logical Conclusions):
 
குறிப்பிட்ட கண்டுபிடிப்பை தர்க்கரீதியாகத்தான் மெய்ப்பிக்க முடியும் என்பதற்கு கீழ்க்கண்ட உதாரணத்தை எடுத்து கொள்வோம்.
 
A = B என்றும் B = C என்றும் வைத்து கொண்டால் A = C என்று மெய்ப்பிக்க முடியும்.
 
2. செயலறிவு சார்ந்த முடிவு அ‌ல்லது அனுபவ அறிவு (Empirical Relationship):
 
தர்க்கரீதியாக மெய்ப்பிக்க முடியாத விஷயங்களை புள்ளிவிவரங்களை (Statistics) கொண்டுதான் மெய்ப்பிக்க முடியும். இது அனுபவத்தையும், புள்ளி விபரங்களையும் அடிப்படையாக கொண்ட ஒரு விஷயமாகும்.
 
இதே போன்று வாஸ்து என்பது அறிவியலே என்று தர்க்கரீதியாக அனைத்து விஷயங்களையும் மெய்ப்பிக்க முடியாவிட்டாலும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் அனைத்தையும் மெய்ப்பிக்க முடியும்.

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ன் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்