வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 30 நவம்பர் 2016 (14:21 IST)

இதுதான் முத்துராமலிங்கம் படத்தின் கதை

முத்துராமலிங்கம் என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவதை நாடு அறியும். கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, ராஜதுரை என்பவர் படத்தை இயக்கி வருகிறார். இளையராஜா இசை.

 
சாதி பெருமிதப் படமாக தயாராகும் இந்தப் படத்தின் கதையை அதன் இயக்குனரே வெளியிட்டுள்ளார். அப்படியென்ன கதை...? 
 
அவரே சொல்கிறார்.
 
கதாநாயகன் முத்துராமலிங்கத்தின் தந்தை சிலம்பம் கற்று தரும் பள்ளி நடத்தி வருபவர். ஒரு சமயம் திருநெல்வேலியில் நடக்கும் சிலம்பம் போட்டியில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அதில் கதாநாயகன் எதிரிகளை தாக்குகிறார்.
 
இதனால், வில்லன் காவல்துறையில் புகார் செய்ய, கைது செய்ய வரும் காவல்துறை அதிகாரிக்கும், கதாநாயகனின் தந்தைக்கும் மோதல் ஏற்படுகிறது. அதன்பிறகு, தந்தையோடு தலைமறைவாகிறார் கதாநாயகன். இவர்களை கைது செய்ய வரும் தனிப்படை போலீஸ் அதிகாரி அவர்களை பிடிக்கும் முயற்சியில் தோல்வியடைகிறார்.
 
கதாநாயகனோடு சிலம்பம் சண்டை செய்து ஜெயித்தால் அவனை கைது செய்யலாம் என கதாநாயகி சவால்விட, இந்தப் போட்டியில் அதிகாரியும், கதாநாயகனும் களம் இறங்குகிறார்கள். அதில் கதாநாயகன் வெற்றியடைந்து ஊரையும் தந்தையின் மானத்தையும் காப்பாற்றுகிறார்.
 
சாதி பெருமிதத்தைப் பேசுவதற்கு தோதான கதை. பாடல்களையும் அப்படியே உருவாக்கியிருப்பதால் முத்துராமலிங்கம் கலவரத்தை ஏற்படுத்துமோ என்ற பீதி நடுநிலையாளர்களிடம் உள்ளது.