வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (22:28 IST)

'விவேகம்' படத்தை முதன்முதலில் பார்க்க போகும் அதிர்ஷ்டசாலி இந்த மூவர்தான்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் 100% முடிந்துவிட்டது. தற்போது இந்த படம் கியூப் லேபில் மெயின் காப்பி தயாராகி வருகிறது.



 
 
இந்த நிலையில் இந்த படம் சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரண்டு நாட்களில் மூன்று பேர் கொண்ட சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து சான்றிதழ் தரவுள்ளனர். படக்குழுவினர் இந்த படத்தை ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் வெளியாட்களில் முதன்முதலில் இந்த படத்தை பார்ப்பவர்கள் இந்த மூன்று சென்சார் அதிகாரிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்சார் சான்றிதழ் கைக்கு வந்தவுடன் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் அறிவிக்கவுள்ளது. எனினும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம்தேதி வெளியாவது 100% உறுதியாகிவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்