வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 2 ஜூன் 2016 (17:17 IST)

நடிகர்களின் சம்பளத்தில் கத்திரி போடுங்கள்...

நடிகர்களின் சம்பளத்தில் கத்திரி போடுங்கள்...

தமிழ் திரையுலகம் நாளுக்குநாள் சீரழிவை நோக்கி செல்கிறது. சீரழிவு என்றால், வியாபார சீரழிவு. 


 


விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என்று முத்தரப்புக்கும் நஷ்டமே பெரும்பாலும் சித்திக்கிறது. ஒவ்வொரு வெள்ளியும் சிலர் தங்களின் மொத்த சொத்தையும் இழக்க, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டும் இந்திய அளவில் பெரும் கோடீஸ்வரர்களாக உருவெடுத்து வருகின்றனர்.
 
நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் அதீத சம்பளத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. மதுரை, ராமநாதபுரம் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
பெரிய படங்களால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. 50 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தை பிடித்துவிட்டே தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட வேண்டும். படம் லாபம் சம்பாதித்தால் 25 சதவீதத்தை அவர்களுக்கு தரலாம். நஷ்டமடைந்தால் அந்தப் பணத்தை தரத்தேவையில்லை. அந்தப் பணத்தை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் பிரித்து தரவேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 
 
ஒருவேளை படம் அதிக லாபத்தை தந்தால்...? விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் மொத்த லாபத்தையும் எடுத்துக் கொள்வார்கள். 
 
இந்த ஒருதலைபட்சமான முடிவை நடிகர்களோ, தொழில்நுட்பக் கலைஞர்களோ கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.