வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2016 (12:40 IST)

விஜய்யுடன் நேரடியாக மோதும் சந்தானம்!!

காமெடியனாக கொடிகட்டிப் பறந்த சந்தானம் இப்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார்.


 
 
அடுத்து தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை விசேஷ தினங்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார். அதை உடனே செயல் படுத்தவும் தயாராகி வருகிறார்.
 
சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிடத் திரையிடத் திட்டமிட்டுள்ளாராம். ஆனந்த் பால்கி இயக்கியுள்ள சர்வர் சுந்தரம் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
 
இந்தப் பொங்கலுக்கு விஜய் படம் பைரவா வெளியாகும் என பாக்ஸ் ஆபீஸில் பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு போட்டியாக விஷால் களமிறங்கினார். 
 
இப்போது மேலும் போட்டிக்கு சந்தானம் களமிறங்குவது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆக இந்தப் பொங்கலுக்கு விஜய்யின் பைரவாவுடன் விஷாலின் கத்தி சண்டை மற்றும் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ரிலீஸ் ஆகிறது.