வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 9 மார்ச் 2017 (15:48 IST)

பாண்டிராஜ் தயாரிக்கும் ‘செம’

தன்னிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வள்ளிகாந்த் இயக்கும் ‘செம’ படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

 
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக, கேரளாவைச் சேர்ந்த புதுமுகம் அர்த்தனா நடிக்கிறார்.  யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜனா என்பவர் வில்லனாக  அறிமுகமாகிறார். 
 
வள்ளிகாந்த் நண்பர் ஒருவரின் திருமணத்தில் நடந்த நகைச்சுவை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை  உருவாக்கியிருக்கிறார்கள். பாண்டிராஜ் வசனம் எழுதுவதோடு, தன்னுடைய ‘பசங்க புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் மூலம்  தயாரிக்கிறார்.