வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வியாழன், 23 மார்ச் 2017 (16:30 IST)

மீண்டும் உலக அளவில் டிரெண்ட் ஆகிய தல அஜித்தின் 'விவேகம்'

சமீபத்தில் ரத்தக்காயங்களுடன் ஆக்ரோஷமாக அஜித் ஸ்டில் ஒன்று இணையதளங்களில் வெளியாகியது. 'விவேகம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் இந்த ஸ்டில் வெளியான ஒருசில மணி நேரங்களில் டுவிட்டரில் உலக டிரெண்டுக்கு வந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்






இந்நிலையில் நேற்று நள்ளிரவு விவேகம் படத்தின் இன்னொரு ஸ்டில் வெளியாகியுள்ளது. பனிமலையில்  வெள்ளை உடையில் வெள்ளை பிரேம் போட்ட கண்ணாடியில் அஜித் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் இந்த ஸ்டில் அஜித் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி இந்த ஸ்டில் வெளியாகி இரண்டு மணி நேரத்தில் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட் ஆகியது.

அஜித், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.