1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2016 (18:21 IST)

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் - கலையரசனுக்கு பதில் அதர்வா

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் - கலையரசனுக்கு பதில் அதர்வா

அறிமுக இயக்குனர் ஓடம் இளவரசு, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தை அறிவித்த போது, அதில் நாயகனாக நடிப்பவர் என்று கலையரசனின் பெயர் குறிப்பிடப்பட்டது.


 


ஆனால், தற்போது கலையரசன் படத்தில் இல்லை.
 
அவருக்குப் பதில் நடிகர் அதர்வாவை நாயகனாக்கியுள்ளனர். இடையில் என்ன நடந்தது என்பது ஓடம் இளவரசுக்கே வெளிச்சம்.
 
இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக ரெஜினாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் தற்போது ரெஜினா நடித்து வருகிறார். செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.