1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (04:59 IST)

முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள்! மகளிர் கிரிக்கெட்டில் மகத்தான சாதனை

ஒரு பக்கம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கிளைமாக்ஸை எட்டியுள்ள நிலையில் இன்னொரு பக்கம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் இமாலய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.



 


தென்னாப்பிரிக்காவில் கடந்த சில நாட்களாக இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் தீப்தி மற்றும் பூனம் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள் எடுத்தனர். தீப்தி 160 பந்துகளில் 188 ரன்களும், பூனம் 109 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய அணி 358 ரன்கள் குவித்தது.

பின்னர் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி வெறும் 109 ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 248 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது.

188 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை தீப்தி, ஒரு நாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிக ரன் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயா சர்மா எடுத்த 138 ரன்களே ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.