வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (07:13 IST)

ஈடன் கார்டன் மைதானம்: பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் மழை உறுதி

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் போட்டியை நடத்த தயார் நிஅலியில் உள்ளது.


 


சுமார் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் அமைந்துள்ள இந்த மைதானத்தில் பச்சை பசேலென்ற புற்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளது. இந்த மைதானத்தில் 6 மிமீ உயிர புற்களுடன் இருப்பதல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் அஸ்வினின் சுழற்பந்து இலங்கை வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே இலங்கை அணியின் கேப்டன், பயிற்சியாளர் மைதானத்தை பார்வையிட்ட நிலையில் நேற்று  இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரகானே ஆகியோர் ஆடுகளத்தை பார்வையிட்டனர்.  3 மிமீ உயர புற்கள் இருந்தாலே பந்து ஸ்வீங், கேரி மற்றும் பவுன்ஸ் ஆகியவை அதிக அளவில் இருக்கும். ஆனால் இங்கு 6மிமீ புற்கள் இருப்பதால் இந்த மைதானத்தில் விக்கெட் மழை உறுதி என்று கருதப்படுகிறது.