Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழ் திரையுலகில் தனித்து வென்ற ஜாம்பவான் பஞ்சு அருணாசலம்

லெனின் அகத்தியநாடன் 

Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (15:24 IST)

Widgets Magazine

தமிழக திரையுலகத்தில் பிரபல தயாரிப்பாளராகவும், கதாசிரியருமாகவும் அறியப்படுபவர் பஞ்சு அருணாசலம்.
 

 
1941ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி பிறந்த தனது இளமைப் பருவத்தில் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக பணியாற்றியதன் மூலம் சினிமா துறையில் நுழைந்தவர் பஞ்சு அருணாசலம்.
 
தங்களது முன்னோர்களால் திரையுலகில் நுழைந்த எல்லோரும் ஜெயித்த வரலாறு கிடையாது. தனித் திறைமை கொண்ட சிலர் மட்டுமே நிலைத்து நிற்கின்றனர். அந்த வகையில் பஞ்சு அருணாசலம் அவர்கள் தனது பன்முகத் திறமையால் தனது இறுதி காலம் வரை திரைத்துறையில் தனித்து அறியப்பட்டவர்.
 
கண்ணதாசன் மறைவிற்கு பின்னர், அவரே பல திரைப்படங்களுக்கு பாடல்கள் இயற்றியும் உள்ளார். முதன் முதலில் கலங்கரை விளக்கம் படத்தில் ‘‘பொன்னெழில் பூத்தது’’ என்ற பாடலை இயற்றினார். பின்னர், 'சாரதா' படத்தில் வரும் 'மணமகளே, மருமகளே வா, வா’ என்ற பாடலின் மூலம் திரையுலகில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.
 
தொடர்ந்து, ’என்னை மறந்ததேன் தேன்றலே’, ’என் மனத்தோட்டத்து வண்ணப்பறவை’, ’முத்தமிழ் கவியே.. முக்கனி சுவையும் தருக...’, ‘ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்’, ’புத்தும் புது காலை’, ’காதலின் தீபமொன்று’, ’கண்மணியே காதல் என்பது’, ’பருவமே புதிய பாடல் பாடு’, ’வா பொன் மயிலே’, ’எந்த பூவிலும் வாசம் வரும்’, ‘மேகம் கருக்கையில புள்ள தேகம் குளிருதடி’, ‘அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை’ போன்ற அற்புதமான பல பாடல்களை இயற்றியுள்ளார்.
 

 
இது தவிர அன்னக்கிளி, பிரியா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு முழுப் பாடல்களையும் எழுதியுள்ளார். முக்கியமாக பலரின் மறுப்பிற்கு பின்னரும் இசைஞானி இளையராஜாவை அறிமுகப்படுத்தி, தமிழ் திரையுலகில் ஓர் அரிதான வரலாற்று நிகழ்வை ஏற்படுத்திய பெருமை பஞ்சு அருணாசலம் அவர்களையே சாரும்.

இது குறித்து ஒருமுறை இளையராஜாவை அறிமுகப்படுத்தியது பற்றி கூறுகையில், “கதாசிரியர் ஆர்.செல்வராஜ் அப்போது என் உதவியாளராக இருந்தார். புதியவர்களை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட அவர், 'இளையராஜா என்று ஒரு இளைஞர் இருக்கிறார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்.....


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜய் சேதுபதியின் மனைவியாக நடிக்கும் ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா விஜய் சேதுபதியின் மனைவியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

news

மோகன்லாலை தொடர்ந்து பிரபுடன் நடிக்கும் கௌதமி

பாபநாசம் படத்தில் கமலுடன் நடித்த ராசி கௌதமிக்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. நமது ...

news

நயன்தாராவுக்கு ‘லிப் டூ லிப்’ கொடுத்த பள்ளி மாணவன் (வீடியோ)

திருநாள் படத்தில் பள்ளி மாணவன் ஒருவன் நயன்தாராவுக்கு உதட்டில் முத்தமிடும் காட்சி ஒன்று ...

news

அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா ...

Widgets Magazine Widgets Magazine