1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (12:22 IST)

கடந்தவார படங்களின் வசூல் ஒரு பார்வை

கடந்தவாரம் வெளியான படங்கள் எதுவும் சோபிக்கவில்லை. முந்தையவார படங்களே சென்னை பாக்ஸ் ஆபிஸில்  முந்துகின்றன. முக்கியமாக பைரவா.

 
இந்திப் படமான ஓகே ஜானு சென்ற வார இறுதியில் 1.65 லட்சங்களை வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை அதன் சென்னை  வசூல் 15.4 லட்சங்கள்.
 
சிரஞ்சீவியின் தெலுங்குப் படம் கைதி நம்பர் 150 கடந்த வார இறுதியில் 3.78 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை அதன்  சென்னை வசூல், 46.50 லட்சங்கள்.
 
பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ரா சடகரினி தெலுங்குப் படம் சென்ற வார இறுதியில் 4.09 லட்சங்களை சென்னையில்  வசப்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிறுவரை அதன் சென்னை வசூல், 21.40 லட்சங்கள்.
 
மலையாளப் படங்களும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் மிதக்க ஆரம்பித்துள்ளன. மோகன்லால் நடித்துள்ள முந்திவள்ளிகள்  தளிர்க்கும்போள் திரைப்படம் சென்றவார இறுதியில் 5.10 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
அமீர் கானின் தங்கல் இன்னும் சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப் 10 -க்குள் உள்ளது. சென்ற வார இறுதியில், 5.78 லட்சங்களை  வசூலித்த படம், இதுவரை 4.53 கோடிகளை சொந்தமாக்கியுள்ளது.
 
துல்கர் சல்மான்கானின் மலையாளப் படம், ஜோமோன்டெ சுவிசேஷங்கள் வெள்ளி, சனி, ஞாயிறில் 7.75 லட்சங்களை  வசூலித்துள்ளது. துருவங்கள் பதினாறு திரைப்படம் சென்ற வார இறுதியில் 9.68 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.  விமர்சகர்களின் பாராட்டை பெற்ற இப்படம், சென்னையில் இதுவரை 1.43 கோடியை தனதாக்கியுள்ளது.
 
வின்டீசல், தீபிகா படுகோனின் ட்ரிபிஸ் எக்ஸ் திரைப்படம் சென்ற வார இறுதியில் 11 லட்சங்களை சொந்தமாக்கியுள்ளது.  கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை கலெக்ஷன், 43.73 லட்சங்கள்.
 
முதல் வாரத்தில் ஐந்தாவது இடத்துக்கு கீழ் தள்ளப்பட்ட பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக சென்ற வார இறுதியில்  11.15 லட்சங்களை தனதாக்கிய இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் ஞாயிறுவரையிலான சென்னை கலெக்ஷன் 27.36  லட்சங்கள் மட்டுமே.
 
தொடர்ந்து அதே முதலிடத்தில் பைரவா. சென்ற வார இறுதியில் ஜல்லிக்கட்டு பேராட்டம் காரணமாக சில தடங்கல்கள்.  அதையும் மீறி 90.53 லட்சங்களை படம் தனதாக்கியுள்ளது. முதல் 11 தினங்களில் சென்னையில் பைரவா சொந்தமாக்கியது, 5.59  கோடிகள்.
 
ஜனவரி 26 வெளியாவதாக இருந்த எஸ் 3 தள்ளிப் போனதால் பைரவாவின் வசூல் வேட்டை இந்த வாரமும் தொடர  வாய்ப்புள்ளது.