வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜெ.பி.ஆர்.
Last Modified: சனி, 8 அக்டோபர் 2016 (16:55 IST)

சினி பாப்கார்ன்

சினி பாப்கார்ன்

 
சித்தியே சரணம்:
 
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த நடிகை அஞ்சலியை சென்னைக்கு அழைத்து வந்து நடிப்பு, நடனம் என்று பயிற்சி கொடுத்து, சினிமாவில் அறிமுகப்படுத்தியவர், அவரது சித்தி பாரதி தேவி. பாரதி தேவி இல்லையென்றால், அஞ்சலி சினிமாவில் நுழைந்திருப்பாரா என்பது கேள்விக்குறி.
 
கொஞ்சம் பெயரும் புகழும் கிடைத்ததும் சித்தியுடன் அஞ்சலிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. என்னதான் அறிமுகப்படுத்தியவராக இருந்தாலும், சம்பாதிப்பதை எல்லாம் அவரே எடுத்துக் கொண்டால் கோபம் வரத்தானே செய்யும்? 
 
சித்தியுடன் சண்டை போட்டு தனியாகச் சென்ற அஞ்சலி பல பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டது அனைவரும் அறிந்ததே. தற்போது மீண்டும் ஐக்கியமாகியிருக்கிறாராம்.
 
ஒரே ரத்தம்ங்கிறது இதுதானோ.
 
கபாலி நடிகையின் துணிச்சல்:
 
காஷ்மீர் மாநிலம் உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்திய மொழிப் படங்களில் நடிக்க தடை விதித்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி திரையுலகை சேர்ந்த நடிகர் சல்மான்கான், கரண் ஜோகர், அனுராக் காஷ்யப் மற்றும் ஓம்புரி ஆகியோர் குரல் எழுப்பினர்.
 
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த கபாலி நாயகி ராதிகா ஆப்தே, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த வாட்ச் (கைக்கெடிகாரம்) நிறுவனங்கள் இந்தியாவில் வந்து கடைகளை திறக்கும் போது, பாகிஸ்தான் நடிகர்கள் இங்கு வந்து நடிக்கக்கூடாதா? அந்நாட்டு நடிகர்கள் இங்கு வந்து நடிக்கட்டும். இது தான் என்னுடைய நிலைப்பாடு என்று கூறினார்.
 
சபாஷ்... சரியான பதிலடி.
 
நீச்சல் உடை... கிலி கிளப்பும் லட்சுமி மேனன்:
 
கவர்ச்சியாக நடிக்கிறேன் என்றாலும், அதெல்லாம் வேண்டாம் என்றுதான் லட்சுமி மேனனிடம் இயக்குனர்கள் கூறுகிறார்கள். அதுவே லட்சுமி மேனனுக்கு ஈகோவாக தெரிகிறது போலும்.
 
ஏன் மத்த நடிகைகள் போல் நான் கவர்ச்சிகாட்டக் கூடாதா என்று ஏடாகூடமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியை பாருங்கள்...
 
நீச்சல் உடையில் கிளாமராக நடிப்பது எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் நீச்சல் கற்றுக் கொண்டபோது ஸ்விம் சூட் அணிந்துள்ளேன். அப்படியிருக்கும்போது படங்களில் நீச்சல் உடையில் வருவதற்கு எனக்கு தந்த தயக்கமும் இல்லை. எனவே, கதைக்கு தேவைப்பட்டால் நீச்சல் உடை அணிந்து நடிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 
நீங்க நடிப்பீங்க... நாடு தாங்குமா...?