வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும்

ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும்

ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள்.


 
 
ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை “கண்டிகை” என்பார்கள்.
 
சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.
 
தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
 
சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும் ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது.
 
மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். யோகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும்.
 
ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.