செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By கே.என்.வடிவேல்
Last Updated : செவ்வாய், 24 மே 2016 (15:45 IST)

அம்மனுக்காக இரத்தம் சிந்தும் பக்தர்கள்

அம்மனுக்காக இரத்தம் சிந்தும் பக்தர்கள்

கரூரில் அருள்மிகு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு  பக்தர்கள் அம்மனுக்காக பக்தியுடன் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


 

தமிழகத்தில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயில்களில் கரூர் மாரியம்மன் கோயில் முதன்மையானது. இந்த கோயிலில் , ஒவ்வொரு வருடமும் வைகாசி பெருவிழா மே 8 ஆம் தேதி கம்பம் நடுதல் விழாவுடன் தொடங்கியது. மே 13 ஆம் தேதி பூச்சொரிதல் விழா விடியவிடிய நடைபெற்றது.
 

 
இந்த நிலையில், மே 23 ஆம் தேதி, விரதம் இருந்து அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துதல், பால் குடம், கம்புத்தொட்டில், மாவிளக்கு, பூமுடி போன்ற நிகழ்ச்சிகளைக் கொண்ட திருவிழா நடைபெற்றது. இதே போன்று இன்றும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். அதிகாலை முதலே அமராவதி ஆற்றில் குளித்துவிட்டு, பக்தியோடு பல அடி நீளம் கொண்ட அலகை தனது கன்னத்தில் குத்திக்கொண்டு பல கிலோ மீட்டர் தொலைவு தூரம் வந்து அம்மன் வழிபட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
 

அலகு குத்தும் போது, சிறிய அளவில் இரத்தம் எட்டிப்பார்க்குமாம், ஆனால், அப்போது திருநீறு அந்த இடத்தில் வைத்துவிட்டால், இரத்தம் வெளியாவது அப்படியே தடை பட்டு நின்றுவிடுமாம். மேலும், அலகுகுத்தும் போது ஏற்படும் வலியும் காணாமல் போய்விடும் என பக்தர்கள் பக்திமனம்கமல சொல்கிறார்கள்
 
இந்த விழாவின் மிக முக்கிய விழாவான கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா நாளை மே 25 ஆம் தேதி புதன்கிழமை மாலை நடைபெறும் என்பது குறிப்பிடத்ககது.