வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 28 ஜூலை 2016 (17:01 IST)

ஆகஸ்ட் 2 ம் தேதி குரு பெயர்ச்சி விழா

ஆகஸ்ட் 2 ம் தேதி குரு பெயர்ச்சி விழா

ஆகஸ்ட் 2 ம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது.
 

 
நவகிரங்களில் மிகவும் முக்கிய யோக கிரகமாக கருதப்படுவது குரு ஆகும். ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகள் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்டு மாதம் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18 ம் நாள், அதாவது ஆகஸ்ட்  2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.
 
இந்த குரு பெயர்ச்சி மூலம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகள் மிகவும் யோகம் அடைகின்றனர். மேலும், குரு வழிபாடு மூலம் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பலன் பெறுகிறது.
 
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில், குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி 28 ம் தேதிவரை முதல் கட்டமாகவும், குருப் பெயர்ச்சிக்குப்பின் ஆகஸ்ட் 4 ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதிவரை இரண்டாவது கட்டமாகவும் நடைபெற உள்ளது.