வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (04:29 IST)

தமிழ்நாட்டி புதிய ஆளுநர் யார்?

தமிழ்நாட்டி புதிய ஆளுநர் யார்?

தமிழகம் உள்பட சில மாநில ஆளுநர்களின் பதவிக்காலம்  விரைவில் முடிய உள்ள நிலையில் புதிய ஆளுநரை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


 


இதில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி உள்ள பா.ஜ.வில்  நீண்டகாலமாக இருந்து கட்சியிலும் ஆட்சியிலும்,  சிறப்பாகவும் நேர்மையாகவும் செயல்பட்ட மூத்த தலைவர்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி கர்நாடக மாநில மேலவை உறுப்பினராக உள்ள  டி.எச்.சங்கரமூர்த்தியின் பெயரை மாநில பாஜ தலைமை, மத்திய அரசுக்கு சிபாரிசு செய்துள்ளதாக  அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட அதிக வாய்பிருப்பதாக கூறப்படுகிறது.