Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எடப்பாடிக்கு சசிகலா போட்ட மூன்று கண்டிஷன்: அதிர்ச்சியில் முதல்வர்!

எடப்பாடிக்கு சசிகலா போட்ட மூன்று கண்டிஷன்: அதிர்ச்சியில் முதல்வர்!

வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:02 IST)

Widgets Magazine

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று பதவியேற்றார். இந்நிலையில் அவருக்கு சிறையில் இருக்கும் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மூன்று உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அதிமுக கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.


 
 
சசிகலாவின் அந்த மூன்று உத்தரவுகளையும் தற்போது துணை பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி சொன்னதாக கூறப்படுகிறது.
 
சசிகலாவின் கண்டிஷன் என தினகரன் கூறிய அந்த மூன்று உத்தரவுகள்:
 
1. ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கு உங்களை நியமித்தாலும், அதை நீங்கள் மட்டும் தனித்து செய்ய வேண்டாம் என கூறியுள்ளார்.
 
2. ஆட்சி நிர்வாகத்தில் எந்த முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானாலும் அதனை என்னிடமும், திவாகரனிடமும், நடராஜனிடமும் தெரிவித்து எங்கள் ஒப்புதல் பெற்ற பின்னரே செயல்படுத்த வேண்டும். எங்கள் மூவரிடமும் ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் கூறி எங்களின் வழிக்காட்டுதலோடு ஆட்சியை நடத்த வேண்டும்.
 
3. வாரத்திற்கு ஒரு நாள் சிறையில் இருக்கும் சசிகலாவை கட்டாயம் சந்திக்க வேண்டும். அவரிடமும் ஆட்சி நிர்வாகத்தில் இருக்கும் அனைத்து விவரங்களையும் கூறி அவரது ஒப்புதலையும் பெற வேண்டும்.
 
இவ்வாறு மூன்று கட்டளைகளை சசிகலா தினகரன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறப்பித்ததாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான சந்தோஷத்தை விட இந்த உத்தரவுகளை நினைத்து கலக்கத்தில் உள்ளாராம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சசிகலா சென்னை சிறைக்கு மாற்ற முயற்சியா?: என்ன சொல்கிறார் தினகரன்

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா ...

news

ஒரு ஓட்டு போச்சு - எடப்பாடியை எதிர்க்கும் மைலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ்

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக மைலாப்பூர் எம்.எல்.ஏ நடராஜ் ...

news

திட்டித் தீர்த்த சென்னை மக்கள் - தப்பித்து ஓடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் (வீடியோ)

நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, கூவத்தூரிலிருந்து புறப்பட்ட எம்.எல்.ஏக்களை ...

news

எடப்பாடி பழனிச்சாமி என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் - மு.க.ஸ்டாலின் கிண்டல்

தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து ...

Widgets Magazine Widgets Magazine