வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (12:43 IST)

அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் அதிரடி நீக்கம்: மதுசூதனன் நடவடிக்கை!

அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் அதிரடி நீக்கம்: மதுசூதனன் நடவடிக்கை!

அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவையும் அவரால் கட்சியில் சேர்க்கப்பட்டு துணை பொதுச்செயலாளராக உள்ள டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை இன்று அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளார் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்.


 
 
சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த மதுசூதனன் அங்கிருந்து பிரிந்து அதிமுகவின் ஓபிஎஸ் அணிக்கு வந்தார். இதனால் சசிகலா அவரை கட்சியில் இருந்தும் அவைத்தலைவர் பதவியில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.
 
ஆனால் அவரை தற்காலிக பொதுச்செயலாளராக நியமித்ததே செல்லாது அவர் பொதுச்செயலாளரே இல்லை. அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் செல்லாது. எனவே நாங்கள் அதே பதவியில் தான் நீடிக்கிறோம் எங்களை நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு இல்லை என ஓபிஎஸ் அணியில் உள்ள மதுசூதனன், பொன்னையன் உள்ளிட்டோர் கூறினர்.
 
இதனால் யாருக்கு அதிகாரம் உள்ளது என்ற குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் மதுசூதனன் அதிரடியாக சசிகலா, டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
 
அவரது அறிவிப்பில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதால் அதிமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்படுகிறார். வெங்கடேஷ், தினகரன் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கபடுகின்றனர். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் எந்த அதிகாரமும் இல்லாமல் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.