வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : ஞாயிறு, 28 மே 2017 (10:01 IST)

அரசியலுக்கு வருவது எப்போது? - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

ரஜினிகாந்தின் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது. கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். 


 

 
எனவே, அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கர்நாடகாவில் வசிக்கும் ரஜினியின் அண்ணன் சத்யநாரயணா, செய்தியளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். ஊழலை அகற்றவே ரஜினி அரசியலுக்கு வர  விரும்புகிறார். இதுதான் மக்களின் விருப்பமும் கூட. இதுகுறித்து அவர் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டு வருகிறார். அனைவருமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார்” என கூறினார்.
 
எனவே, ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகி விட்டது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்குகிறது. அதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு புறப்புட்டு சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரகளிடம் பேசிய அவர் “ அரசியலுக்கு வருவது பற்றி விரைவில் அறிவிப்பேன்” என அவர் தெரிவித்தார்.
 
இந்த செய்தி அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.