வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 30 மார்ச் 2017 (11:27 IST)

ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதன் காரணமாக, அப்பகுதி பெண்கள் மிகவும் பிசியாக உள்ளனர்.


 

 
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன், தினகரன், தீபா, திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் அந்த தொகுதி களை கட்டியுள்ளது.
 
தங்கள் பலங்களை காட்டிவதற்காக, வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர்களோடு ஏரளமானோர் அழைத்து செல்லப்படுகின்றனர்.  அப்படி உடன் வருகிறவர்களுக்கு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி பெண்கள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
 
வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க ரூ.100, மாடியிலிருந்து மலர்களை தூவ ரூ.250, சின்ன கோலத்திற்கு ரூ.600, பெரிய கோலம் போட நான்கு பேருக்கு ரூ.1000, கூட்டத்தில் கலந்து கொள்ள ரூ.200, பிரச்சாரத்திற்கு உடன் வருபவர்களுக்கு ரூ.300, கும்ப மரியாதை கொடுக்க ரூ.200 என அரசியல் கட்சிகள் கொடுப்பதாக தெரிகிறது.  


 

 
அதேபோல், சமீபத்தில் தண்டையார் பேட்டையில் தினகரன் பிரச்சாரத்தை செய்தார். அதற்கு முன் அங்கு வந்த அவரின் ஆதரவாளர்கள், அந்த பகுதி சிறுவர்களை தலைக்கு ரூ.100 கொடுத்து அழைத்து வந்து நடனம் ஆட வைத்ததாக கூறப்படுகிறது. இது தவிர்த்து, ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது தனி.  
 
இப்படி ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைப்பதால் அந்த பகுதி மக்கள், முக்கியமாக பெண்களும், சிறுவர்கள் கையில் ஏராளமான பணம் புழங்குவதாக கூறப்படுகிறது.