Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்: அதிர்ச்சியில் ஈபிஎஸ்

வெள்ளி, 19 மே 2017 (04:29 IST)

Widgets Magazine

அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் மத்திய அரசின் கடைக்கண் பார்வையை நோக்கி தவமிருந்து வருகின்றன. மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு ஆட்சியை காப்பாற்ற ஈபிஎஸ் அணியும், மத்திய அரசுடன் நல்லுறவு கொண்டு ஆட்சியை கைப்பற்ற ஓபிஎஸ் அணியும் முயற்சித்து வருகிறது. 


இந்நிலையில் இப்போதைக்கு மத்திய அரசு ஈபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுத்து வருவதாகவும், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் காட்சி மாறலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென ஓபிஎஸ் டெல்லி கிளம்பியுள்ளார்.

அவர் மத்திய அரசின் அழைப்பின்பேரில் கிளம்பினாரா? அல்லது அவராகவே கிளம்பினாரா? என்பது குறித்து தெரியாததால், ஈபிஎஸ் அணி குழப்பம் அடைந்துள்ளது.

ஓபிஎஸ் அணி தரப்பில் இருந்து அவரது டெல்லி பயணம் குறித்து கூறுகையில், 'ஓபிஎஸ் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாகவும், அதன்பின்னர் நேற்று மரணம் அடைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவேவின் இறுதி சடங்கில் அவர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறினர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கார்த்தி சிதம்பரம் திடீர் லண்டன் பயணம்: சிபிஐ ரெய்டு எதிரொலியா?

பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்கிவிட்டு ...

news

குல்பூஷண் மரண தண்டனைக்கு தடை. சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட ...

news

மனித இனம் விரைவில் அழிந்துவிடும்: ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

தொழில்நுட்ப வளர்ச்சி மனித இனத்தை விரைவில் அழித்து விடும் என பிரபல வானியல் அறிஞர் ஸ்டீபன் ...

news

மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய மாணவர் மின்னல் தாக்கி பலி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய கல்லூரி மின்னல் தாக்கி ...

Widgets Magazine Widgets Magazine