வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2017 (18:29 IST)

இனி அரசு சிறையில் இருந்து செயல்படும்: மார்கண்டேய கட்ஜூ

எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றத்தை அடுத்து இனி அரசு சிறையில் இருந்து செயல்படும் என மார்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 

 
ஓ.பனனீர்செல்வம் ராஜினாமா செய்த இரண்டு நாட்களில் சசிகலாவுக்கு எதிராக களம் இறங்கினார். அதைத்தொடர்ந்து சசிகலா, ஓ.பி.எஸ்., என இரண்டு அணிகள் ஆட்சியமைக்க போராடி வந்தனர்.
 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைப்பி விடுத்தார். அதன்படி தற்போது எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
 
இந்நிலையில் மார்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில், இனி அரசு சிறையில் இருந்து செயல்படும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்து அதிமுக மரண பாதையை முடிவு செய்துள்ளது. மறுதேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.