வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Modified: திங்கள், 12 மே 2014 (11:27 IST)

பள்ளிக்கூடங்களில் +2 மதிப்பெண் சான்றிதழ் 21 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது

+2 மதிப்பெண் சான்றிதழ் 21 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் +2 தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த வருடம் வரலாறு காணாத வகையில் தேர்ச்சி சதவீதம் 90.6 ஆக உயர்ந்தது.
 
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 113 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்தது.
 
+2 தேர்வு முடிவு வெளியானதும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண்களை கொண்டு மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், என்ஜினீயரிங் படிப்புகளான பி.இ., பி.டெக். முதலிய படிப்பில் சேர விண்ணப்பித்து வருகிறார்கள். எப்போது மதிப்பெண் சான்றிதழ் கொடுக்கப்படும் என்று +2 மாணவர்கள் எதிர்பார்த்தனர். +2 மதிப்பெண் சான்றிதழ் 21 ஆம் தேதி முதல் அவரவர் படித்த பள்ளிக்கூடங்களிலேயே வழங்கப்பட உள்ளது.
 
இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.