வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (22:01 IST)

அதிமுக 130 - திமுக 70: சொல்வது டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்

அதிமுக 130 - திமுக 70: சொல்வது டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில்,  அதிமுக 130 தொகுதிகளையும், திமுக 70 தொகுதிகளையும் பெறும் என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தியது.
 
இதில், அதிமுக 130 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 70 தொகுதிகளும், மற்றவர்கள் 34 தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறிப்பார்கள் என்று கணித்துள்ளது. இந்த தேர்தலில் தமிழக பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என அடித்துக் கூறியுள்ளது.  ஆக மோடி மோகம் சில மாதங்களே என நிரூபணமாகியுள்ளது.