வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (12:13 IST)

தமிழகத்துக்கு மீண்டும் புதிய முதலமைச்சர்?

தமிழகத்துக்கு மீண்டும் புதிய முதலமைச்சர்?

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியதும் தமிழக அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. 6 மாதத்திற்கு பின்னர் அதுபோன்ற ஒரு சூழல் தற்போது நிலவுகிறது.


 
 
அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணியாக பிரிந்து இருந்தது. சசிகலா சிறைக்கு சென்றது சசிகலா அணியானது எடப்பாடி அணி தினகரன் அணியாக இரண்டாக பிரிந்தது. இதனையடுத்து எடப்பாடி அணிக்கும் தினகரன் அணிக்கும் மோதல் போக்கு ஆரம்பித்தது. இந்த மோதல் தற்போது ஓபிஎஸ் அணி இணைந்துள்ளதால் வெடித்துள்ளது.
 
நேற்று ஓபிஎஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்ததை அடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் இன்று ஆளுநர் வித்தியாசாகர் ராவை சந்தித்து கடிதம் ஒன்று அளித்துள்ளனர். அந்த கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். மேலும் முதல்வர் மீது எம்எல்ஏவாகிய நானும் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளனர்.
 
மேலும் அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நான் ஏற்கனவே அளித்த ஆதரவை இந்த கடிதத்தின் மூலம் திரும்ப பெறுகிறேன் என கூறியுள்ளனர். ஆளுநரை சந்தித்த பின்னர் தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியதை வைத்து பார்க்கும் போது அவர்கள் கோரிக்கை ஆட்சியை கலைப்பது அல்ல மாறாக முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பது தான் என்பது தெரிகிறது.
 
இதுகுறித்து கூறிய தங்க தமிழ்ச்செல்வன், ஆளுநர் வித்தியாசாகர் ராவிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அதனால் அவரை மாற்ற வேண்டும் என கூறி கடிதம் கொடுத்துள்ளோம் அதனை பெற்றுக்கொண்ட ஆளுநர் எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறினார்.
 
19 எம்எல்ஏக்களின் நம்பிக்கையை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்றிவிட்டு வேறு முதல்வரை நியமிக்க சட்டத்தில் எல்லா வழியும் உள்ளது என்பதை ஆராய்ந்து தான் இந்த கோரிக்கையை வைத்துள்ளோம். சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்போம் என தங்க தமிழ்ச்செல்வன்.