வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2017 (12:18 IST)

எனக்கு எதிராக 13 அமைச்சர்கள் - குமுறலை கொட்டித் தீர்த்த தினகரன்

ஆர்.கே.நகர் தொகுதி வெற்றி பெறக்கூடாது என தனக்கு எதிராக 13 அமைச்சர்கள் வேலை செய்வதாக டி.டி.வி. தினகரன் ஆலோசனைக் கூட்டத்தில் குமுறலை கொட்டியுள்ளார்.


 

 
ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதில்,  தான் போட்டியிட உள்ளதாக தினகரன் அறிவித்தார். ஆனால், ஓ.பி.எஸ் அணியின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனது. மேலும், அதிமுக என்ற பெயரையே பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. 
 
எனவே, தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார் தினகரன். ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் இரட்டை மின் கம்பம் சின்னத்தில் போட்டியிடுகிறார். மேலும், தீபா படகு சின்னத்திலும், திமுக சார்பில் மருது கணேஷ் மற்றும் பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனவே, வலுவான போட்டியிருப்பதால் தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
மேலும், ஆர்.கே.நகர் தொகுதில் தினகரன் வெற்றி பெறுவதை ஜெயக்குமார், ராஜூ, வேலுமணி, எம்.ஆர்.விஜய் பாஸ்கர் உள்ளிட்ட 13 அமைச்சர்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது. எனவே, அவர்கள் மீடியாக்களுக்கு போஸ் கொடுக்கிறார்களே தவிர, தினகரனுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவதில்லை. மேலும், தேர்தல் முடிவிற்கு பின் அவர்கள் அணி மாறும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த தினகரன், தனது ஆதரவாளர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருடன் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி தனது உள்ளக்குமுறைலை கொட்டியுள்ளார். 
 
ஜெ. மறைந்து விட்டார். சசிகலாவும் சிறையில் இருக்கிறார். வழக்கு விசாரணை என தினமும் என்னை நீதிமன்றத்திற்கு அலைய வைத்து மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. ஓ.பி.எஸ் அணியினரின் செயல்பாடுகளால் இரட்டை இலை சின்னமும் பறிபோய்விட்டது. சில அமைச்சர்கள் எனக்கு எதிராக வேலை செய்கின்றனர். 
 
நான் வெற்றி பெற்றால்தான் கட்சியும், சின்னமும் நம்மிடம் இருக்கும். இல்லையெனில் எல்லாம் நம் கையை விட்டு போய்விடும். எனவே தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்படுங்கள் என தினகரன் கண்ணீர் மல்க பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.