வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 3 ஏப்ரல் 2017 (17:57 IST)

தேர்தலில் வெற்றி பெற ஜோதிடத்தில் மூழ்கிய தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணியை வேட்பாளர் தினகரன் பிரச்சாரம் செய்யும் நேரம் என எல்லாவற்றிலும் ஜோதிடர்களின் சொல்லை பின்பற்றி வருகிறாராம்.


 

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற சசிகலா தரப்பு அணி மற்றும் ஓபிஎஸ் அணியினர் கடுமையான போட்டியில் ஈடுப்பட்டுள்ளனர். அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரன் சசிகலா பெயரை பயன்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகிறார். 
 
ஜெயலலிதா புகைப்படம் மற்றும் அவரது பெயரை பயன்படுத்தி ஒட்டு கேட்டு வருகிறார். இந்நிலையில் தினகரன் தேர்தலை முன்னிட்டு செய்யக்கூடிய அனைத்து வேலைகளிலும் தனது ஆஸ்தான ஜொதிடர்களின் ஆலோசனையை தான் பின்பற்றி வருகிறாராம்.
 
தினகரன், தொப்பி சின்னத்தை தேர்வு செய்ய காரணம் ஜோதிடர்கள் தானாம். அதேபோல் பிரச்சாரத்தை எந்த திசையில் தொடங்கி எந்த திசையில் முடிக்க வேண்டும்; எந்த நேரத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என ஜோதிடர்கள் சொல்வதை வேதவாக்காக செய்து வருகிறாராம்.