வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (16:44 IST)

ராம்குமாரை எப்படி வீடியோ எடுக்க வேண்டும்?, எடுத்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?: நீதிமன்றம் நிபந்தனை

ராம்குமாரை எப்படி வீடியோ எடுக்க வேண்டும், எடுத்த பின்னர் என்ன செய்ய வேண்டும்: நீதிமன்றம் நிபந்தனை

இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதி கேட்ட காவல்துறைக்கு அனுமதி அளித்த நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.


 
 
எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்த மனுவில் ராம்குமாரை வீடியோ எடுக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து ராம்குமாரின் வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
 
இதனை விசாரித்த நீதிமன்றம் ராம்குமாரை வீடியோ எடுக்க அனுமதி அளித்ததோடு ஒரு சில நிபந்தனைகளை விதித்தது. அதில் அதில், ராம்குமாரை வீடியோ, புகைப்படம் மற்றும் உடல் தொடர்பான அளவீடுகள் எடுக்க வேண்டும். காவல்துறையில் புகைப்பட பிரிவில் துணை ஆய்வாளர் தகுதிக்கு குறையாத நபர் வீடியோ உள்ளிட்டவைகளை எடுக்க வேண்டும்.
 
வீடியோ எடுத்த பிறகு, அதை எழுப்பூர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். வழக்கில் விசாரணை அதிகாரிக்கு தேவையான வசதியை புழல் சிறை-2 கண்காணிப்பாளர் செய்து தர வேண்டும். வீடியோ உள்ளிட்டவற்றை அடுத்தக்கட்ட ஆய்விற்காக தடயவியல் துறைக்கும் அனுப்ப வேண்டும் போன்ற நிபந்தனைகளை நீதிபதி பிறப்பித்துள்ளார்.