வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (08:54 IST)

எடப்பாடியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை?: கூவத்தூரில் இருந்து வெளியேறாத அதிமுக எம்எல்ஏக்கள்!

எடப்பாடியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை?: கூவத்தூரில் இருந்து வெளியேறாத அதிமுக எம்எல்ஏக்கள்!

அதிமுக இரண்டாக உடைந்ததை அடுத்து அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா தரப்பு கூவத்தூர் விடுதியில் அடைத்து வைத்தனர். அவர்களை இன்னமும் முழுமையாக விடுவிக்கவில்லை.


 
 
அவர்களின் கையெழுத்து மூலம் ஆட்சியை கைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியுள்ளது சசிகலா தரப்பு. ஆனால் இன்னமும் கூவத்தூரில் தான் எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கிருந்து இன்னமும் தங்கள் பணிகளை செய்ய திரும்பவில்லை.
 
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு திரும்பினார்கள்.
 
சட்டசபையில் தங்கள் பெரும்பான்மையை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறியதை அடுத்து சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வகையில் நாளை சட்டமன்றம் கூடுகிறது.
 
எனவே நாளை சட்டமன்றம் கூடி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் தான் இருப்பார்கள் எனவும் அங்கிருந்து பேருந்து மூலம் கொண்டு வந்து சட்டசபையில் வாக்கெடுப்புக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

எம்எல்ஏக்கள் சிலர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக இருப்பதாலும், அவர்கள் ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிட்டால் எடப்பாடியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் வரும் என்பதால் எம்எல்ஏக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கூவத்தூரில் வைத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.