வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரி வழிபாட்டில் கன்னியா பூஜையின் சிறப்பு பலன்கள்...

நவராத்திரி வழிபாட்டில் கன்னியா பூஜையின் சிறப்பு பலன்கள்...

வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டுமாயின். அவற்றை அருளும் நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட கடப்பிடிக்கப் பட வேண்டும் என ஆகம நூல்கள் கூறுகின்றன.


வாழ்க்கையின் எல்லா தேவைகளையும் அடைய பணம், பொருள் வேண்டும். இதற்காக மகாலட்சுமி தேவியை வணங்குகிறோம். பெற்ற பணத்தை பாதுகாக்க மன வலிமை வேண்டும் அதற்காக துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பெற்று பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனள்ள காரியங்களிற்கு பயன் படுத்த அறிவு அதாவது கல்வியறிவு வேண்டும். அதற்கு சரஸ்வதித் தாயை வணங்குகிறோம். 
 
புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சாரதா நவாராத்திரி என அழைக்கப்படும். நவராத்திரியின் ஒன்பது நட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒருவயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்கிறார்.
 
கன்னியின் வயதிற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வதினால் அளவிட முடியாத புண்ணியம் உண்டாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்னியா பூஜை செய்வதால் சகலசெல்வங்களையும் பெறலாம்.
 
நவராத்திரி வழிபாட்டின் பலன்கள்:
 
நவராத்திரி விரதம் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்க கூடியது.
 
ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று புராணங்கள் கூறுகின்றன.
 
நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும் என்று கூறப்படுகிறது
 
கொலு வைத்திருப்பவர்கள் அதன் முன் நவக்கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும். தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை அதாவது மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை வருபவர்களுக்கு தானமாக அளிக்க வேண்டும்.
 
மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய தேவியரே நவராத்திரி நாயகியர் ஆவர். இத் தேவியரை நவராத்திரி காலத்தில் மனமாரத் தியானித்து நாவாரப்பாடி, உளமாரப் போற்றி வழிபட்டு முறையே வீரத்தையும், செல்வத்தையும், கல்வியையும் பெற்று வளமோடு வாழ்வோம்.