Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொடுகை விரட்டும் எளிமையான இயற்கை வழிமுறைகள்!!

Widgets Magazine

பொடுகுகள் இருந்தால் தலையில் அரிப்பு ஏற்படும். அதனால் தொடர்ச்சியாக தலையை சொரியும் போது எண்ணைச் சுரப்பிக் கொப்புளம் உண்டாகும். இயற்கை முறையில் பொடுகினை ஒழிக்க முற்படுவதே, சிறந்த வழி. இதனால் பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் நன்கு ஆரோக்கியமாக பொலிவோடு காணப்படும்.

 
1. வெந்தயம்
 
இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முடியிலும், தலை சருமத்திலும் படுமாறு தேய்த்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின் 30 நிமிடங்கள் கழித்து முடியை நன்கு தண்ணீரில் அலச வேண்டும். இந்த சிகிச்சையை தொடர்ந்து 4 வாரங்கள் மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
 
2. எலுமிச்சை
 
குளிக்க போகும் முன், தலை சருமத்தில் எலுமிச்சை ஜூசை வைத்து நன்கு மசாஜ் செய்து, 15-20 நிமிடங்களுக்கு பின் தலையை தண்ணீரில் அலசுங்கள். இந்த சிகிச்சை முடியின் பசைத் தன்மையை குறைத்து, பொடுகை ஒழித்து, கூந்தலை ஜொலிக்க செய்யும்.
 
3. வினிகர்
 
சமமான அளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் மிதமான ஷாம்புவால் தலை முடியை அலசுங்கள்.
 
4. தயிர்
 
தலையிலும், தலைச் சருமத்திலும் படுமாறு தயிரை தடவிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஊற விடுங்கள். பின் மிதமான ஷாம்பூவால் தலை முடியை நன்றாக அலசுங்கள். இதனை வாரம் இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.
 
5. முட்டை
 
இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, பின் ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசுங்கள். இந்த சிகிச்சை பொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.
 
6. எண்ணெய்
 
பொடுகை நீக்க பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி, தலைச் சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் நன்கு ஊற விட்டு, காலையில் எழுந்ததும், தலையை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
 
7 கற்றாழை
 
குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கற்றாழை ஜெல்லை, தலைச் சருமத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஷாம்புவை கொண்டு தலையை அலசிக் கொள்ளவும்.
 
8. தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தல்
 
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து, அதை தலைச் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து, ஒரு நல்ல ஷாம்புவைக் கொண்டு தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
 
10. ஆப்பிள், ஆர்ஞ்ச் பழங்கள்
 
சமமான அளவைக் கொண்ட, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களை கொண்டு ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை ஸ்கால்ப்பில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
 
11. வேப்பிலை
 
சில வேப்ப இலைகளை எடுத்து, அதை நன்கு பேஸ்ட் செய்து, அதனை அப்படியே தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
 
12. துளசி மற்றும் நெல்லிக்காய்
 
துளசி மற்றும் நெல்லிக்காய் பொடிகளை தண்ணீரோடு கலந்து ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பசையை கொண்டு தலைச் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்புவால் தலைமுடியை நன்றாக அலசுங்கள்.
 
13. பூண்டு
 
இரண்டு டீஸ்பூன் பூண்டு பொடியை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறோடு கலந்து பேஸ்ட் செய்து, அதனை தலைச் சருமத்தில் தேய்த்து, 30-40 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் ஷாம்புவைக் கொண்டு குளிர்ந்த நீரில் முடியை அலசுங்கள்.
 
14. வெங்காயத்தை பயன்படுத்தல்
 
சிறிது வெங்காய விழுதை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின் தலையை நன்றாக கழுவி, இறுதியில் சிறிது எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து நீரில் அலசினால், வெங்காய வாடை தலையை விட்டு நீங்கும், அத்துடன் பொடுகும் நீங்கிவிடும்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்க கூடிய பயன்கள்!!!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், ...

news

பார்வை குறைபாடுகளை சரிசெய்யும் கேரட்!!

கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், ...

news

சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய நான்கு முக்கிய எண்ணெய்கள்

எண்ணெய் என்பது சமையலில் ஒரு தவிர்க்க முடியாத பகுதி. எண்ணெய் வறுக்க, பொரிக்க, தாளிக்க ...

news

உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்க என்ன செய்ய வேண்டும்??

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், ...

Widgets Magazine Widgets Magazine